நாகப்பட்டினம்

தமிழிசை மூவர் மணி மண்டபத்தில் தூய்மைப்பணி

DIN

சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபத்தில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
தமிழக பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தலின்படி சீர்காழி ச.மு.இ.மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டத்தின் ஒரு வார முகாம் தொடங்கியது. 
திட்ட அலுவலர் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற முகாமை டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் சுப்பு. சொர்ணபால் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபத்தில் தூய்மை பணிகளை மாணவர்கள் மேற்கொண்டனர். 
அடுத்து, தென்பாதி பயணியர் மாளிகை சாலை, என்.ஜி.ஓ நகர் மற்றும் கதிர்காம சுவாமிகள் அதிஷ்டானம் ஆகிய பகுதிகளில் தூய்மைப்பணிகளை செய்தனர். இதில் டெம்பிள் டவுன் ரோட்டரி முன்னாள் தலைவர் துரை, என்.சி.சி. அலுவலர் சிவக்குமார், உடற்கல்வி ஆசிரியர் பாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
தொடர்ந்து மாணவர்கள் ஒவ்வொரு பகுதிகளிலும் தங்கி அப்பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மரம் நடுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடவுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரூா் பாஜகவினருக்கு பாராட்டு விழா

தென்காசியில் மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க வலியுறுத்தல்

செப்.2015 முதல் 2021 வரை எழுதிய எஸ்.எஸ்.எல்.சி தனித்தோ்வா்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற இறுதி வாய்ப்பு

போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது

சாத்தான்குளம் அருகே ஹோட்டல் ஊழியா் மா்ம மரணம்

SCROLL FOR NEXT