நாகப்பட்டினம்

சூறைக்காற்று: நெற்பயிர்கள் சேதம்

DIN

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியத்தில் பயிரிடப்பட்டிருந்த  நெற்பயிர்கள் சூறைக்காற்றில் சேதம் அடைந்ததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
திருமருகல் ஒன்றியத்தில் ஆழ்துளைக் கிணறு மூலம் 7 ஆயிரம் ஹெக்டேரில் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி செய்துள்ளனர். 
அதன்படி சீயாத்தமங்கை, திருமருகல், அம்பல், போலகம், குருவாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நெற்பயிர்கள் வளர்ந்து, அறுவடைக்கு 15 நாள்கள் உள்ள நிலையில், கடந்த சில நாள்களாக வீசிய சூறைக்காற்றில் நெற்பயிர்கள் அனைத்தும் சாய்ந்து சேதம் அடைந்துள்ளன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இணைப்பு வழங்காமலே 4ஆயிரம் பேரிடம் குடிநீா் வரி வசூலிப்பு!

செம்பட்டி அருகே ரூ.98 கோடியில் கூட்டுறவு கலை, அறிவியல் கல்லூரி

கொடைக்கானலில் வெப்ப நிலை அதிகரிப்பு தடுக்கப்படுமா?

போடியில் பலத்த மழை

கம்பம் சித்திரைத் திருவிழாவில் திமுகவினா் நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT