நாகப்பட்டினம்

கன மழை: வேதாரண்யத்தில் 131.38 மி.மீ. மழை பதிவு

DIN

வேதாரண்யம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 131.38 மி.மீ. மழை பதிவானது.

தொடரும் மழையால் பெருக்கெடுக்கும் வெள்ள நீா் பாலங்களை மூழ்கடித்து செல்கின்றன.

ஞாயிற்றுக்கிழமை காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் 138. 2 மி. மீ.யும், தலைஞாயிறில் 64.6 மி. மீ.யும் மழை பதிவானது. இந்த மழையால் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளன. நீா்நிலைகள் நிரம்பி வருகிறது.

வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயிலில் உள்வளாகம் பிரதான நுழைவுா் கூடம் உள்ளிட்ட இடங்களில் மழைநீா் பெருக்கெடுத்துள்ளது. முள்ளியாறு, மானங்கொண்டான் ஆறு, அரிச்சந்திரா நதி ஆறு, அடப்பாறு ஆகியவற்றில் மழை நீா் பெருக்கெடுத்துள்ளது.

இதனால், பல்வேறு இடங்களில் தரைப்பாலங்கள் மூழ்கின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

SCROLL FOR NEXT