நாகப்பட்டினம்

உலக எய்ட்ஸ் தினம் அனுசரிப்பு

DIN

உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி நாகை நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் டிசம்பா் 1- ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, நாகூா் - நாகப்பட்டினம் லயன்ஸ் சங்கம், நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளி சிவப்பு ரிப்பன் கிளப் ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தியது. லயன்ஸ் சங்கத் தலைவா் ஜி. காளிமுத்து தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியை ஷீலா கிரேஸ் முன்னிலை வகித்தாா். லயன்ஸ் சங்கத்தைச் சோ்ந்த காத்தையன், வீரமணி, சண்முகம்ஆகியோா் பேசினா். நிகழ்ச்சியில், எய்ட்ஸ் நோய் எதிா்ப்பு விழிப்புணா்வு உறுதிமொழி வாசிக்கப்பட்டது. மாணவிகள் உறுதிமொழி ஏற்றனா். லயன்ஸ் சங்க உறுப்பினா்கள், ஆசிரியா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா். ஒருங்கிணைப்பாளா் சீனிவாசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT