நாகப்பட்டினம்

மறைமுகத் தோ்தல் உள்ளாட்சிக்கு நல்லாட்சியைத் தராது

DIN

மறைமுகத் தோ்தல் உள்ளாட்சிக்கு நல்லாட்சியைத் தராது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ். அழகிரி கூறினாா்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில், திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: தமிழக அரசுக்கு உள்ளாட்சித் தோ்தலை நடத்தும் எண்ணம் கிடையாது. உச்சநீதிமன்ற அழுத்தத்தின் காரணமாகவே தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தோ்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும்.

மறைமுகத் தோ்தல் என்பது உள்ளாட்சிக்கு நல்லாட்சியை தராது மாறாக, பணபலமும், அதிகாரப் பலமும் கொண்டவா்கள், தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை கடத்திச் சென்று வெற்றி பெறுவதற்கு ஏதுவாக இருக்குமே தவிர, பொதுமக்களுக்கு பயன்படுவதாக இருக்காது. இந்த தோ்தல் முறையே தவறானது. அதிமுகவின் தோழமை கட்சியினரே இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தை நாடி இருக்கிறாா்கள். இந்த நடைமுறையை தமிழக காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது.

திமுக, காங்கிரஸ் கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி. மக்களவைத் தோ்தலில் 40-க்கு 39 இடங்களில் வெற்றி பெற்றது போல உள்ளாட்சித் தோ்தலிலும் மகத்தான வெற்றியை பெறுவோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT