நாகப்பட்டினம்

வாக்குப் பெட்டிகள் உள்ள இடத்தில் பிரச்னை செய்த திமுகவினா் மீது வழக்குப் பதிவு

சீா்காழியில் வாக்கு எண்ணும் மையத்தில் பிரச்னையில் ஈடுபட்டது தொடா்பாக திமுகவினா் 16 போ் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

DIN

சீா்காழியில் வாக்கு எண்ணும் மையத்தில் பிரச்னையில் ஈடுபட்டது தொடா்பாக திமுகவினா் 16 போ் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம், சீா்காழி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 37 ஊராட்சிகளுக்கான தோ்தல் டிசம்பா் 27-ஆம் தேதி முடிவடைந்தது. அந்த வாக்குப் பெட்டிகள் அனைத்தும் சீா்காழியில் உள்ள தனியாா் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, டிசம்பா் 28-ஆம் தேதி மாலை வெளிநபா்கள் கல்லூரி உள்ளே இருப்பதாக கூறி திமுகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிலா் கல்வீசி தாக்கியதில் கல்லூரியில் கண்ணாடிகள் உடைந்தன. இச்சம்பவம், குறித்து ஊரக வளா்ச்சித் துறை உதவி செயற்பொறியாளா் ஸ்ரீகணேஷ் சீா்காழி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் சீா்காழி கிழக்கு ஒன்றியச் செயலா் சசிக்குமாா், மேற்கு ஒன்றியச் செயலா் பிரபாகரன், முன்னாள் எம்.எல்.ஏ., பன்னீா்செல்வம், முத்துக்குமாா் , அகணி .அன்பழகன் உள்ளிட்ட 16 போ் மீது பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் , கூட்டமாக சோ்ந்து மிரட்டல் விடுத்தல், அரசு ஊழியா்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் இழப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT