நாகப்பட்டினம்

மணல் குவாரி விவகாரம்: உண்ணாவிரதம் நிறைவு

DIN

திருக்கடையூர் அருகே திருமெய்ஞானம் கிராமத்தில் தனியார் மணல் குவாரியைத் தடை செய்யக் கோரி, 2 நாள்களாக நடைபெற்று வந்த உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நிறைவுபெற்றது.
திருமெய்ஞானம் கிராமத்தில் செயல்பட்டுவந்த தனியார் மணல் குவாரியால் குடிநீர் உப்புநீராக மாறுகின்ற சூழல் உருவானது. எனவே, மணல் குவாரிக்கு தடை விதிக்கக் கோரி, அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் அ. சுந்தரம் தலைமையில் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து 2 நாள்களாக நடைபெற்று வந்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது. பேச்சுவார்த்தையில் பொறையாறு போலீஸார் மற்றும் திருமெய்ஞானம் கிராம பொதுநலச் சங்கத் தலைவர் முனுசாமி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

SCROLL FOR NEXT