நாகப்பட்டினம்

தேய்பிறை சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

DIN

திருக்குவளை மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் வெள்ளிக்கிழமை தேய்பிறை சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. 
அருள்மிகு இருதய கமலநாத சுவாமி கோயிலில் உள்ள அருள்மிகு ஸ்ரீவலம்புரி விநாயகர் மற்றும் வலிவலத்தில் உள்ள ஸ்ரீ இரட்டை விநாயகர், ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ வெள்ளை விநாயகர் உள்ளிட்ட  விநாயகர்களுக்கு தேய்பிறை சதுர்த்தியையொட்டி பால், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதேபோல், திருக்குவளையில் தருமையாதீனத்துக்கு சொந்தமான திருக்குவளை ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் உள்ள ஸ்ரீ தியாக விநாயகர் மற்றும் தேரடி பிள்ளையார் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT