முகப்பு
நாகப்பட்டினம்

அம்மா பூங்கா, உடற்பயிற்சிக் கூடம் திறப்பு

பொறையாறு அருகேயுள்ள மானிக்கபங்கு ஊராட்சியில் ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்ட அம்மா பூங்கா மற்றும்

Updated On : 23 ஜனவரி 2019, 9:26 am IST
பகிர்:

பொறையாறு அருகேயுள்ள மானிக்கபங்கு ஊராட்சியில் ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்ட அம்மா பூங்கா மற்றும் நவீன உடற்பயிற்சி கூட திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தை பூம்புகார் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் திறந்து வைத்து 
பேசினார். 
இதில், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) அருண், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நல்லமுத்து மற்றும் மானிக்கபங்கு மீனவ கிராம பஞ்சாயத்தார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.