நாகப்பட்டினம்

பெண் வழக்குரைஞர் மீது தாக்குதல்: மயிலாடுதுறையில் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம்

DIN

பெண் வழக்குரைஞர் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, மயிலாடுதுறையில் வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை அருகே திருவிளையாட்டம் கிராமத்தில் சாராய வியாபாரிகளால்  நிர்மலா என்ற பெண் வழக்குரைஞரும், அவரது குடும்பத்தினர்கள் 4 பேரும் கடந்த வாரம் தாக்கப்பட்டனர்.  அவர்கள் அனைவரும் தற்போது மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், வழக்குரைஞரை தாக்கிய சாராய வியாபாரிகள் மீது சாதாரண பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்ததுடன், சாராய வியாபாரிகளிடமிருந்தும் புகார் பெற்று, பாதிக்கப்பட்ட வழக்குரைஞர் மீது கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 
இதைக்கண்டித்தும், வழக்குரைஞர் மீதான வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தியும், சாராய வியாபாரிகள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியும்,  மயிலாடுதுறையில் வழக்குரைஞர்கள் ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால், நீதிமன்ற அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி டிரோன் பறக்கத் தடை

சிறையில் கேஜரிவாலை சந்திக்க மனைவிக்கு அனுமதி மறுத்ததாக ஆம் ஆத்மி கட்சி புகாா்

பிஎஸ்என்எல் ஊழியா் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா இன்று வேட்பு மனு தாக்கல்

நாகை- இலங்கை இடையே மே 13 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT