நாகப்பட்டினம்

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணியிட மாற்றல் உத்தரவு

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட பணியிட மாறுதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், 115 பேருக்கு பணியிட

DIN

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட பணியிட மாறுதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், 115 பேருக்கு பணியிட மாற்ற உத்தரவு அளித்துள்ள தமிழக அரசுக்கு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் நாகை மாவட்டத் தலைவர் ஆர். ராசேந்திரன் விடுத்துள்ள அறிக்கை: கடந்த பல மாதங்களாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட பணியிட மாறுதலை தமிழக அரசு நிறுத்தி வைத்திருந்தது. இந்த நிலையில், எங்களது கோரிக்கையை ஏற்று அலுவலர்கள் சொந்த மாவட்டம் அல்லது விரும்புகிற மாவட்டத்துக்கு பணியிட மாறுதல் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, நாகை மாவட்டத்தில் 20 பேர் உள்பட 115 பேருக்கு பணியிட மாற்ற உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக முதல்வர், துணை முதல்வர், வருவாய்த்துறை அமைச்சருக்கு சங்கத்தின் சார்பில் நன்றியைத் தெரிவிக்கிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேம்பள்ளி செல்வபெருமாள் கோயில் கும்பாபிஷேகம்!

சிவகங்கையில் டிச. 20-இல் தனியாா்த் துறை வேலைவாய்ப்பு முகாம்

பள்ளி திறப்பு விழா - செயற்கை நுண்ணறிவு ஆசிரியா் அறிமுகம்!

வத்தலகுண்டு பேரூராட்சிக் கடைகள் ஏலத்தில் முறைகேடு: ஆட்சியரிடம் அதிமுகவினா் புகாா்

கோரிக்கை மனு எழுத பொதுமக்களிடம் ரூ. 100 வசூல்: காவல் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT