நாகப்பட்டினம்

புயல் நிவாரணம் கோரி கிராம மக்கள் மனு

DIN

கஜா புயலின்போது பாதிக்கப்பட்ட 282 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, வெள்ளப்பள்ளம்  கிராம மக்கள்  நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
கஜா புயலில் பாதிப்புக்குள்ளான  நாகை மாவட்டம்,  வேதாரண்யம் வட்டம், வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த 282 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இதுவரை  அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரணம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில்,  திங்கள்கிழமை  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த வெள்ளப்பள்ளம் கிராம மக்கள்,  பாதிக்கப்பட்ட அனைவருக்கும்  புயல் நிவாரணம் வழங்கக் கோரி மனு அளித்தனர். நாம் தமிழர் கட்சியின் நாகை தெற்கு மாவட்டத் தலைவர்  கு. ராஜேந்திரன், தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர்  பா.  விஜயானந்தன் உள்ளிட்டோர் கிராம மக்களுடன் வந்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT