நாகப்பட்டினம்

விவசாயிகளுக்கு பயிர்  காப்பீட்டுத் தொகை வழங்கல்

DIN

வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் 1,966 விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகையாக ரூ.1. 65 கோடி வழங்கும் பணி  அண்மையில் தொடங்கியது.
ஆயக்காரன்புலம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி மூலம் 2017-18-ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்த 1,966 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 1.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையைப் பகிர்ந்தளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கூட்டுறவு சங்கத்தின் தலைவர் வி. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து, பணியைத் தொடங்கி வைத்தார். வங்கியின் நிர்வாகக்குழு இயக்குநர்கள் செந்தில்குமார், கலியமூர்த்தி, அலுவலர் வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT