நாகப்பட்டினம்

விதிமுறைகளை மீறும் ஆட்டோ ஓட்டுநர்கள்: பொதுமக்கள் அவதி

DIN

கீழ்வேளூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் விதிமுறையை மீறுவதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கீழ்வேளூரிலிருந்து குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பேருந்து வசதி இருப்பதால் கீழ்வேளூர்- தேவூர், தேவூர் - கீழ்வேளூர் வரை நாள்தோறும் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதி சாலை மிகவும் குறுகியதாகவும் போக்குவரத்து நெரிசலுடனும் காணப்படுகிறது. இருப்பினும், ஆட்டோ ஓட்டுநர்கள் அதைக் கவனத்தில் கொள்ளாமல் சாலை ஓரமாக ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றாமல் சாலையின் நடுவில் நிறுத்தி பயணிகளை ஏற்றுக்கின்றனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிறது. தவிர, சாலையின் நடுவில் ஆட்டோவை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதால், சிலசமயம் பின்புறம் வரும் இருசக்கர வாகனங்களும், கார்களும் சிறு சிறு விபத்துக்குள்ளாக நேரிடுகிறது. இதேபோல், ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். இது பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூ ஏற்படுத்துவதாக கூறுகின்றனர். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை காவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆட்டோ ஓட்டுநர்கள் விதிமுறைகளை பின்பற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT