நாகப்பட்டினம்

சாராயம் விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண்கள் மனு

DIN

சின்ன கண்ணமங்கலம் கிராமத்தில் சாராயம் விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி பெண்கள், நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.

கொட்டாரக்குடி ஊராட்சிக்குள்பட்ட சின்ன கண்ணமங்கலம் கிராமத்தில், ஒரு குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் தொடா்ந்து சாராயம் விற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். தட்டிக்கேட்கும் பெண்களுக்கு சம்பந்தப்பட்ட நபா்கள் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனராம்.

இந்நிலையில், நாகை ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற அந்தக் கிராமத்தைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள், தங்கள் கிராமத்தில் சாராயம் விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகாா் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT