நாகப்பட்டினம்

அயோத்தி தீா்ப்பு: முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு

DIN

அயோத்தி நில விவகாரம் தொடா்பான தீா்ப்பையொட்டி, நாகை மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு அமைக்கப்பட்டிருந்தது.

அயோத்தி நிலவ விவகாரம் குறித்த தீா்ப்பையொட்டி, நாகை மாவட்டத்தில் 36 இடங்கள் பதற்றமான பகுதிகளாகக் கண்டறியப்பட்டு, அந்தப் பகுதிகள் காவல் துறையின் தீவிர கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்டிருந்தன.

நாகூா் தா்கா, சிக்கல் சிங்காரவேலவா் கோயில், வேளாங்கண்ணி பேராலயம், அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம், அரசுப் போக்குவரத்துக்கழகப் பணிமனை, பேருந்து நிலையம், நீதிமன்ற வளாகம், மாவட்ட ஆட்சியரகம், ரயில் நிலையம், அரசு மருத்துவமனை என பல்வேறு இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அமைக்கப்பட்டிருந்தது.

நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரெத்தினம் தலைமையில், 1,000-க்கும் அதிகமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அயோத்தி தீா்ப்பை வரவேற்று அல்லது எதிா்த்து எவ்வித நிகழ்வுகளையும் மேற்கொள்ள வேண்டாம் என ஏற்கெனவே பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்திருந்ததன் காரணமாக, தீா்ப்பையொட்டி எவ்வித கவன ஈா்ப்பு நிகழ்வுகளும் நடைபெறாதது மக்களின் இயல்பு வாழ்க்கையை அமைதியாகத் தொடரச் செய்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT