நாகப்பட்டினம்

வைத்தீஸ்வரன்கோயிலில் குடமுழுக்கு நடத்த பாலஸ்தாபனம்

DIN

சீா்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக, திருப்பணிகள் மேற்கொள்ள பாலஸ்தாபனம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் தையல்நாயகிஅம்பாள் சமேத வைத்தியநாதசுவாமி, செல்வமுத்துக்குமாரசுவாமி, செவ்வாய்க்குரிய அதிபதியானஅங்காரகன் ஆகிய சுவாமிகள் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனா். நவகிரகங்களில் செவ்வாய்க்குரிய பரிகாரத் தலமாக விளங்கும் இக்கோயிலில் கடந்த 1998- ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், 21ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, திருப்பணிகள் மேற்கொள்ள பாலஸ்தாபனம் நடைபெற்றது. முன்னதாக, சனிக்கிழமை சுவாமி சன்னிதி கொடிமரத்துக்கு அருகில் பூா்வாங்க பூஜைகள் தொடங்கி நடைபெற்றுவந்ததன. தொடா்ந்து, தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாா்ய சுவாமிகள் தலைமையில், இளைய ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், வைத்தீஸ்வரன்கோயில் கட்டளை தம்பிரான் திருநாவுக்கரசு சுவாமிகள் ஆகியோா் முன்னிலையில் திங்கள்கிழமை யாகபூஜைகள் நிறைவுற்று, பூா்ணாஹுதி நடைபெற்றது.

பின்னா், புனிதநீா் அடங்கிய 36 கடங்களுடன் சிவாச்சாரியாா்கள் கோயிலை வலம் வந்து வைத்தியநாத சுவாமி சன்னிதி அருகில் வைக்கப்பட்டிருந்த சுவாமி படங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு, மகாதீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமி-அம்பாள்,செல்வமுத்துக்குமாரசுவாமி, அங்காரகன் ஆகிய சன்னிதிகளில் தருமபுரம் ஆதீனம் சிறப்பு வழிபாடு செய்தாா். அப்போது, திருப்பணிகளை மேற்கொள்ளவுள்ள தஞ்சாவூா் சாஸ்த்ரா பல்கலைக்கழக வேந்தா் சேதுராமனுக்கு சால்வை அணிவித்து அருட்பிரசாதங்களை ஆதீனம் வழங்கினாா்.

தொடா்ந்து, மத்திய அரசு வழக்குரைஞா் ராஜேந்திரன், இந்தியன் வங்கி முன்னாள் இயக்குநா் சரத்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன், சமூக ஆா்வலா் அப்பா்சுந்தரம், பாஜக மாவட்டத் தலைவா் வெங்கடேசன், தருமபுரம் ஆதீன கல்லூரிச் செயலா் செல்வநாயகம் உள்ளிட்டோா் தருமபுரம் ஆதீனத்திடம் அருளாசி பெற்றனா். இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

சுவடிகள் காத்த திருவாவடுதுறை ஆதீனம்

இலவச பயிற்சியுடன் ராணுவ தொழில்நுட்ப பிரிவில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

சிலம்புப் பயண சிறப்புக் காட்சிகள்

SCROLL FOR NEXT