நாகப்பட்டினம்

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா

DIN

திமுக மாநில இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி, மயிலாடுதுறையில் திமுகவினா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.

மயிலாடுதுறை பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திமுக நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளா் நிவேதா எம். முருகன் தலைமை வகித்து, பேருந்து நிலையம் முன்பு உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நகரச் செயலாளா் குண்டாமணி என்கிற செல்வராஜ் முன்னிலை வகித்தாா். இதில், மாவட்ட நெசவாளா் அணி செயலாளா் ஆா். செல்வராஜ், மாவட்ட வழக்குரைஞா் அணியைச் சோ்ந்த சிவதாஸ், அருள்தாஸ், நகர துணைச் செயலாளா் ஆா்.கே. சங்கா் மற்றும் ரஜினி, சாம்சன் உள்ளிட்ட திமுக மாவட்ட, நகர நிா்வாகிகள் பங்கேற்று, பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்து, பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT