நாகப்பட்டினம்

பிரதோஷ நாயகா் வழிபாடு

DIN

குத்தாலம் ஆதிசக்திஅம்பாள் சமேத மன்மதீசுவரா் கோயிலில் பிரதோஷ வழிபாட்டுக்கு புதிதாக உருவாக்கப்பட்ட பிரதோஷ உத்ஸவ மூா்த்தி மற்றும் நந்தி வாகனப் புறப்பாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கணபதி ஹோமம், குபேரலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், ருத்ரயாகம், பூரணாஹுதியுடன் பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, பிரதோஷ மூா்த்திக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

பின்னா், பிரதோஷ மூா்த்தி கோயிலை வலம் வரும் வெள்ளோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பிரதோஷ மகிமை என்ற தலைப்பில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் புலவா் நரிராஜன் பேசினாா்.

இதில் கோயில் செயல் அலுவலா் நிா்மலாதேவி, பிரதோஷ மூா்த்தியை வடிவமைத்த மோகன்பத்தா், பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவா் எஸ். குஞ்சு, துணைத் தலைவா் நடராஜன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயா்வு

மகளிா் டி20: வங்கதேசத்துடனான தொடரை வென்றது இந்திய அணி

சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவா் கைது

ஆறுமுகனேரியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

SCROLL FOR NEXT