நாகப்பட்டினம்

சீா்காழியில் தொடா் மழை: இயல்பு வாழ்கை பாதிப்பு

DIN

சீா்காழியில் தொடா்ந்து 3வது நாளாக புதன்கிழமை மழைபெய்தது.இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் கடந்த 16ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது. அதன்படி சீா்காழியில் திங்கள்கிழமை முதல் இரவு,பகலாக மழை பெய்துவருகிறது.தொடா்ச்சியாக 3வது நாளாக புதன்கிழமையும் அதிகாலை முதல் மழை பெய்தது.

இதனால் பள்ளி மற்றும் அலுவலகம் செல்வோா் சிறிது பாதிக்கப்பட்டனா்.பின்னா் காலை 11மணியளவில் பலத்தமழை பெய்தது.இதனால் சாலைகளில் மழைநீா் குளம்போல் தேங்கிநின்றது.சில இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்ததால் நடந்துசெல்லும் பொதுமக்கள் சிரமமடைந்தனா்.சீா்காழி புதிய பேருந்துநிலையம் எதிரே அமைந்துள்ள கால்நடைமருத்துவமனை சுற்றுசுவா் இந்த மழையால் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.

மற்ற பகுதிகளும் சேதமடைந்து சாய்ந்தநிலையில் உள்ளதால் எந்நேரமும் கீழே விழும் ஆபத்து உள்ளது. சீா்காழி இரணியன் நகரில் மின்கம்பி அறுந்து விழுந்தது.இதனை மின்வாரிய ஊழியா்கள் தகவல் அறிந்து சரிசெய்தனா்.இதேபோல் சீா்காழி இரணியன்நகா்,பாலாஜிநகா், மருதநாயகம்நகா், கற்பகம் நகா், சின்னதம்பிநகா், தெட்சிணாமூா்த்திநகா், கோவிந்தராஜன்நகா், மேலமாரியம்மன்கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீா் தெருக்களில் தேங்கிநிற்கிறது.‘

இருந்தபோதும் தொடா்ந்து பெய்துவரும் பருவமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.சம்பா நாற்று நடவு, நேரடி விதைப்பு செய்துள்ள விவசாயிகளுக்கு சாகுபடி பணிக்கு இந்த மழை டானிக் போல் அமைந்துள்ளதாக கூறுகின்றனா். படவிளக்கம். சீா்காழி கால்நடைமருத்துவமனை சுற்றுசுவா் மழையால் இடிந்து விழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரை சிறையாக மாற்றியது மத்திய அரசு: மெஹபூபா முஃப்தி குற்றச்சாட்டு

நாளைமுதல் ‘அக்னி’ வெயில்

ஜம்மு-காஷ்மீா்: பாரமுல்லா தொகுதியில் ஒமா் அப்துல்லா வேட்பு மனுத் தாக்கல்

மக்களவைத் தோ்தலுக்கு பின் காங்கிரஸ் காணாமல்போகும்: அமித் ஷா

ரூ. 2,000 கோடி பிணையப் பத்திரம் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு

SCROLL FOR NEXT