நாகப்பட்டினம்

கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

DIN

கோடியக்காட்டில் சகோதரர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் அரிவாளால் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். 
வேதாரண்யம் அருகேயுள்ள அகஸ்தியம்பள்ளி தெற்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் சோமு, ஆறுமுகம் சகோதரர்கள். இவர்களில் சோமு மகன் ரவி (42), ஆறுமகம் மகன் செந்தில்(38). ரவி மற்றும் செந்தில் குடும்பத்தினரிடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கோடியக்காட்டில் ரவி மற்றும் செந்தில் குடும்பத்தாரிடையே செவ்வாய்க்கிழமை மோதல் ஏற்பட்டு, இரு குடும்பத்தாரும் ஒருவரையொருவர் அரிவாளால் தாக்கிக்கொண்டதில் செந்தில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதில், இருதரப்பிலும் 4 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  இதுகுறித்து, வேதாரண்யம் போலீஸார் வழக்குப் பதிந்து ரவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், இவ்வழக்குத் தொடர்பாக கோடியக்காடு கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் மகன் ராஜேஷ் எனும் தமிழ்ச்செல்வனை (28) போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். 
சாலை மறியல்: இதற்கிடையில், தகராறில் காயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சாந்தா அளித்த வாக்கு மூலம் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து, அப்பெண் தெரிவித்த குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அகஸ்தியம்பள்ளியில் கொலை செய்யப்பட்ட செந்தில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு மறியல் சிறிது நேரத்திலேயே விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

SCROLL FOR NEXT