நாகப்பட்டினம்

கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டி

DIN

சீர்காழியை அடுத்த புத்தூர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரிகளுக்கிடையேயான ஆண்கள் கபடி போட்டி திங்கள்கிழமை தொடங்கியது.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளுக்கு இடையேயான இந்த கபடி போட்டியில்  33 கல்லூரிகளைச் சேர்ந்த அணியினர் பங்கேற்றனர். போட்டிகள் தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் தே. லெட்சுமி தலைமை வகித்தார். 
பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை தலைவர் பழனிச்சாமி, நிலவள வங்கித் தலைவர் கே.எம். நற்குணன், அதிமுக பேரூர் கழக செயலாளர் போகர்.ரவி, நகரச் செயலாளர் பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி பேராசிரியர் கோ. சதீஸ் வரவேற்றார். சீர்காழி எம்எல்ஏ பி.வி. பாரதி போட்டியைத் தொடங்கி வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் உதவி பேராசிரியர் சத்தியமூர்த்தி, அதிமுக மீனவரணி செயலாளர் நாகரத்தினம், கூட்டுறவு வங்கித் தலைவர் கருணாகரன், தொகுதி இணைச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி இயக்குநர் டி.பிரபாகரன் செய்திருந்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT