நாகப்பட்டினம்

தலைமை ஆசிரியை உள்பட 2 பெண்களிடம் சங்கிலி பறிப்பு

DIN


நாகையில் தலைமை ஆசிரியை உள்ளிட்ட இருவரிடம் சங்கிலியைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸார் தேடிவருகின்றனர். 
நாகை முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி அமுதா (55). நாகூர் தேசிய மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் சனிக்கிழமை காலை வீட்டு வாசலில் கோலமிட்டு கொண்டிருந்தாராம். அப்போது அங்கு தலைக்கவசம் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அமுதாவை தாக்கி கீழே தள்ளிவிட்டு அவர் அணிந்திருந்த 5 பவுன் சங்கலியைப் பறித்து சென்றனர். இதேபோல், நாகை வெளிப்பாளையம், பச்சைப் பிள்ளைக்குளத் தெருவைச் சேர்ந்த சீதாராமன் மனைவி பாமா (58) என்பவரிடம் தலைக்கவசம் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், முகவரி கேட்பது போல் நடித்து பாமாவை தாக்கி, அவர் அணிந்திருந்த 3 பவுன் சங்கலியைப் பறித்துச் சென்றனர்.
இந்நிகழ்வுகள் குறித்து நாகை நகரம் மற்றும் வெளிப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

சாலையில் கிடந்த பணத்தை எஸ்.பி.யிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: மகளிா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

பண்ணைப் பள்ளியின் பயிற்சி வகுப்பு

SCROLL FOR NEXT