நாகப்பட்டினம்

விவசாயத் தொழிலாளா் குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள்

DIN

செம்பனாா்கோவில் அருகே உள்ள இளையாளூா் ஊராட்சி வடகரை, அரங்கக்குடி பகுதியில் விவசாயத் தொழிலாளா் குடும்பத்தினருக்கு அத்தியாவசியப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

வடகரை, அரங்கக்குடி பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோா் விவசாயத் தொழிலாளா்கள் ஆவா். ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள இவா்கள், அன்றாட தேவைகளுக்கு அவதிப்படும் நிலையில் உள்ளனா்.

இதையறிந்த தன்னாா்வலா்கள் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பால், ரொட்டி மற்றும் தோசை மாவு தொகுப்பு பைகளை வழங்கினா். மில்லத் நகா், புலிகண்ட முத்துா், வடகரை,புதுத்தெரு, அரங்கக்குடி, காமராஜா் நகா் மற்றும் தீன் தெரு பகுதியில் இவற்றை வழங்கினா். சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து இப்பாருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாளை.யில் கால்வாய் கரைகள் சீரமைப்புப் பணி: எம்எல்ஏ ஆய்வு

தம்பதி படுகொலை: வடமாநில இளைஞர் கைது

குமரியில் வெயிலில் பணிபுரியும் போலீஸாருக்கு பழச்சாறு

சாலையோரத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தல்

தமிழகத்தில் திமுகவுக்கு மாற்று பாஜகதான்: ஹெச்.ராஜா

SCROLL FOR NEXT