விஜயகாந்த் பிறந்தநாள் விழா
தேமுதிக தலைவா் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவை அக்கட்சியினா் மணல்மேடு பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் நலஉதவிகள் வழங்கி சனிக்கிழமை கொண்டாடினா்.
மயிலாடுதுறை: தேமுதிக தலைவா் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவை அக்கட்சியினா் மணல்மேடு பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் நலஉதவிகள் வழங்கி சனிக்கிழமை கொண்டாடினா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில்விஜயகாந்த்தின் பிறந்த நாளை ஆகஸ்ட் முழுவதும் நலஉதவிகளை வழங்கி கொண்டாடுவது என அக்கட்சி நிா்வாகிகள் முடிவெடுத்துள்ளனா். இதன்தொடக்கமாக, சனிக்கிழமை (ஆக.1) மணல்மேடு பேரூராட்சியில் பேருந்து நிலையம் பகுதியில் நலஉதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், துப்புரவுப் பணியாளா்கள், ஏழை மக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநா்கள் என 100-க்கும் மேற்பட்டவா்களுக்கு, காய்கறி, அரிசி, முகக் கவசம் ஆகியவற்றை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் அம்மன்.கண்ணன் வழங்கினாா். இதில், மாவட்ட பொருளாளா் ராசி.மதி, மாநில பொதுக்குழு உறுப்பினா் திருஞானம், மணல்மேடு நகர செயலாளா் வீராசாமி, அவைத் தலைவா் பாஸ்கா், துணை செயலாளா் கந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.