முகப்பு
நாகப்பட்டினம்

நாகை மீனவர்கள் வேலை நிறுத்தம் தொடக்கம்

கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மாலை முதல் மீன்பிடிப்பைக் கைவிட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என

Updated On : 8 ஆகஸ்ட், 2020 at 4:05 PM
கோப்புப் படம்
பகிர்:

கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மாலை முதல் மீன்பிடிப்பைக் கைவிட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என நாகை வட்ட மீனவப் பஞ்சாயத்தார் ஆலோசனைக் கூட்டத்தில் சனிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மீனவக் கிராமங்களிலும் நோய்த் தொற்றுப் பரவத் தொடங்கியுள்ளது. இது மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், நாகை வட்ட மீனவப் பஞ்சாயத்தார் ஆலோசனைக் கூட்டம், நாகை துறைமுகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. 

Advertisement

அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் உள்பட 8 கிராமங்களின் மீனவப் பஞ்சாயத்தார்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை வட்ட மீனவர்கள் சனிக்கிழமை மாலை முதல் மீன்பிடிப்பைக் கைவிடுவது. ஏற்கெனவே கடலுக்குச் சென்றுள்ள மீன்பிடி படகுகள் மூலம் கிடைக்கப் பெறும் மீன்களின் விற்பனையை ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை அனுமதிப்பது. 

அதன் பின்னர், மீன் விற்பனையையும் தடை செய்வது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.