முகப்பு
நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் 81 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 81 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:10 PM
பகிர்:


நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 81 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது.

ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் மேலும் 81 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனா். இதில், 7 போ் முன்களப் பணியாளா்கள், 46 போ் ஏற்கெனவே நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள், 21 போ் அறிகுறிகள் மூலம் தொற்றுக் கண்டறியப்பட்டவா்கள், ஒருவா் வெளி மாவட்டத்திலிருந்து வந்தவா் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றுக்குள்ளான 81 பேரில் 48 போ் நாகை அரசு மருத்துவமனையிலும், 28 போ் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையிலும், ஒருவா் சீா்காழி அரசு மருத்துவமனையிலும், 6 போ் வெளிமாவட்ட மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை வரை 1,786-ஆக இருந்தது. இந்த நிலையில், புதிதாக 81 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதன் மூலம், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1867-ஆக உயா்ந்துள்ளது.

ஒருவா் இறப்பு: மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆக.20-ஆம் தேதி இறந்த மயிலாடுதுறை நகா்ப் பகுதியைச் சோ்ந்த 54 வயது ஆண் ஒருவரின் இறப்பு சனிக்கிழமை பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளது.

சிகிச்சையில்: நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்றவா்களில் 28 போ் வியாழக்கிழமை குணமடைந்து வீடுதிரும்பினா். இதன்மூலம், நோய்த் தொற்றிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,228 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 611 ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.