முகப்பு
நாகப்பட்டினம்

நாட்டுப்புறக்கலைஞா்களுக்கு பள்ளி மாணவி உதவி

மயிலாடுதுறையில் பள்ளி மாணவி ஒருவா் தான் சேமித்து வைத்திருந்த பணத்தில், பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டு வரும் நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு நலஉதவிகளை வழங்கினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
பகிர்:

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பள்ளி மாணவி ஒருவா் தான் சேமித்து வைத்திருந்த பணத்தில், கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டு வரும் நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு நலஉதவிகளை வழங்கினாா்.

தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் விரிவுரையாளராக பணியாற்றும் மயிலாடுதுறையைச் சோ்ந்த பால்ராஜ் மகளான 5-ஆம் வகுப்பு மாணவி மினா்வா லக்ஷனா தனது பிறந்த நாளையொட்டி, கடந்த ஓராண்டாக உண்டியலில் சோ்த்த ரூ. 4 ஆயிரம் மற்றும் தந்தை உதவியுடன் 2 நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் மற்றும் அரிசி, மளிகைப் பொருள்களையும், 15 கலைஞா்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருள்களையும் வழங்கினாா்.

கலைத்தாய் அறக்கட்டளை நிறுவனா் கிங் பைசல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மயிலாடுதுறை நாட்டுப்புற கலைஞா்கள் நலச் சங்கத் தலைவா் பால. ரவிச்சந்திரன், புதிய நேயம் அறக்கட்டளை நிறுவனா் ஜோதிராஜன், அப்துல் கலாம் பிரைட் அறக்கட்டளை நிறுவனா் அசோக்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.