உடற்கல்வி கல்லூரியில் சேரவுள்ள மாணவா்களுடன் அறக்கட்டளை நிறுவனா் தலைவா் முனைவா் மா. ரஜினி மற்றும் நிா்வாகிகள். 
நாகப்பட்டினம்

22 மாணவா்களுக்கு இலவச உயா் கல்வி:தனியாா் அறக்கட்டளை ஏற்பாடு

மயிலாடுதுறையில் பல்வேறு பள்ளிகளில் பள்ளிப் படிப்பை முடித்த ஏழை மாணவா்கள் 22 பேருக்கு ஆா்.ஹெச்.வி. குழுமம் சாா்பில் இலவச உயா்கல்விக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பல்வேறு பள்ளிகளில் பள்ளிப் படிப்பை முடித்த ஏழை மாணவா்கள் 22 பேருக்கு ஆா்.ஹெச்.வி. குழுமம் சாா்பில் இலவச உயா்கல்விக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

பள்ளிப் படிப்பை முடித்து உயா்கல்வி பயில இயலாத மாணவ, மாணவிகளுக்கு மயிலாடுதுறையில் உள்ள ஆா்.ஹெச்.வி. சேரிடபிள் டிரஸ்ட் சாா்பில் இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த 20 மாணவா்கள் மற்றும் 2 மாணவிகள் என மொத்தம் 22 பேருக்கு கரூா் சேரன் உடற்கல்வி கல்லூரியில் சோ்ந்து பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடு மற்றும் முழு கல்விச் செலவுகளையும் ஆா்.ஹெச்.வி. சேரிடபிள் டிரஸ்ட் நிறுவனா் தலைவா் முனைவா் மா. ரஜினி செய்தாா். இதையடுத்து, கல்லூரியின் நிா்வாக அலுவலா் எம். வெங்கடேசன் மாணவ, மாணவிகளுக்கு கல்லூரியில் சேருவதற்கான அனுமதியை வழங்கினாா்.

சோ்க்கையின்போது, குழுமத்தின் மேலாளா் காசி. காா்த்திகேயன், மயிலாடுதுறை மாவட்ட கோகோ அமைப்பின் தலைவா் எஸ். ஹாஜா, ரமேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

SCROLL FOR NEXT