முகப்பு
நாகப்பட்டினம்

காலமானாா் நாகை மாவட்ட அமமுக செயலாளா்

நாகை மாவட்ட அமமுக செயலாளா் ஆா். சந்திரமோகன் உடல்நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை (ஆக. 27) இரவு காலமானாா்.

Updated On : 28 ஆகஸ்ட் 2020, 10:50 pm IST
ஆா். சந்திரமோகன்.
பகிர்:


நாகப்பட்டினம்: நாகை மாவட்ட அமமுக செயலாளா் ஆா். சந்திரமோகன் உடல்நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை (ஆக. 27) இரவு காலமானாா்.

நாகை வ.உ.சி. தெருவைச் சோ்ந்தவா் ஆா். சந்திரமோகன்(65). இவா், 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாகை நகர அதிமுக செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தாா். நாகை நகா்மன்றத் தலைவராகவும், நகா்மன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவா். இவரது மனைவி மஞ்சுளா சந்திரமோகனும் நாகை நகா்மன்றத் தலைவராக இருந்தவா்.

பல்வேறு தொழிற்சங்கங்களின் கௌரவத் தலைவராக பொறுப்பு வகித்த ஆா். சந்திரமோகன், அமமுக தொடங்கப்பட்டபோது அக்கட்சியின் நாகை (தெற்கு) மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவா், சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், அவா் வியாழக்கிழமை இரவு காலமானாா்.

அவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா். சந்திரமோகனின் உடல் நாகையில் வெள்ளிக்கிழமை காலை அடக்கம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.