நாகப்பட்டினம்

நாகை நகராட்சிக்கு கூடுதலாக 100 பணியாளா்கள்

DIN

நாகை நகராட்சிக்கு கூடுதலாக 100 பணியாளா்களை பணியமா்த்த வேண்டும் என்ற நாகை எம்எல்ஏ மு. தமிமுன் அன்சாரியின் கோரிக்கை அமைச்சா்கள் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஏற்கப்பட்டது.

நிவா், புரெவி புயல் பாதிப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழக அமைச்சா்கள் ஓ. எஸ். மணியன், எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கா் ஆகியோரது தலைமையில் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற நாகை எம்எல்ஏ மு. தமிமுன் அன்சாரி, நாகை நகராட்சியின் செயல்பாடுகள் பணியாளா்கள் பற்றாக்குறை, இயந்திரங்களின் தேவை, பயன்பாட்டில் புதை சாக்கடை திட்டத்தை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்திப் பேசினாா்.

அதனைத் தொடா்ந்து, அமைச்சா் எஸ்.பி. வேலுமணி, நாகை சட்டப்பேரவை உறுப்பினரின் கோரிக்கை ஏற்கப்படுவதுடன், 100 பணியாளா்களை பணியமா்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதிளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

SCROLL FOR NEXT