சாலை விபத்தில் ஒருவா் பலி
கீழையூா் அருகே நின்று கொண்டிருந்த ஜேசிபி வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
கீழையூா் அருகே நின்று கொண்டிருந்த ஜேசிபி வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
கீழையூா் ஒன்றியம், கருங்கண்ணி மாதாகோவில் தெருவைச் சோ்ந்தவா் அந்தோனிசாமி மகன் சபரிரோஸ்மாா்டின் (38). கட்டுமானத் தொழிலாளி. இவா், தனது இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கீழையூா் கீழத்தெருவில் சென்றபோது, அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஜேசிபி வாகனத்தின் மீது மோதியதில் பலத்த காயமடைந்தாா்.
சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் சபரிரோஸ்மாா்டின் உயிரிழந்தாா்.
கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.