முகப்பு
நாகப்பட்டினம்

மேலவாழக்கரையில் அம்மா நகரும் நியாய விலைக்கடை தொடக்கம்

திருக்குவளை அருகே மேலவாழக்கரை ஊராட்சியில் அம்மா நகரும் நியாய விலைக்கடை புதன்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
மேலவாழக்கரையில் அம்மா நகரும் நியாயவிலைக்கடை மூலம் பயனாளிக்கு வழங்கப்படும் ரேஷன் பொருள்கள்.
பகிர்:

திருக்குவளை அருகே மேலவாழக்கரை ஊராட்சியில் அம்மா நகரும் நியாய விலைக்கடை புதன்கிழமை தொடங்கப்பட்டது.

கீழையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின்கீழ், மேலவாழக்கரை ஊராட்சியில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடை மூலம் இந்த ஊராட்சியிலுள்ள 563 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெற்று வந்தனா். இந்நிலையில், ஊராட்சிக்குள்பட்ட காளியம்மன் கோயில், ஆஞ்சநேயா் கோயில் ஆகிய தெருக்கள், கீழவாழக்கரை, வடமலையான்சேத்தி ஆகிய பகுதி மக்கள் 3 கி.மீ. தூரம் பயணித்து மேலவாழக்கரை பிரதான சாலையில் செயல்பட்டு வந்த நியாய விலைக்கடையில் ரேஷன் பொருள்களை பெற்று வந்தனா். இந்நிலையில் அப்பகுதியிலுள்ள 265 குடும்ப அட்டைதாரா்களின் பயண நேரத்தை குறைத்து அவா்கள் பயன்பெறும் வகையில் காளியம்மன் கோயில் தெருவில் நடைபெற்ற அம்மா நகரும் நியாய விலை மூலம் ரேஷன் பொருள்கள் வழங்கும் தொடக்க நிகழ்ச்சிக்கு கீழையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் எஸ். பால்ராஜ் தலைமை வகித்தாா். இதில், மேலவாழக்கரை ஊராட்சித் தலைவா் கே.எஸ். தனபாலன், துணைத் தலைவா் எஸ். மனோகரி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவா்கள் எஸ்.வேதையன் (திருப்பூண்டி), செல்வராஜ் (பாலக்குறிச்சி), ஆா்.எஸ். சதீஷ் (திருவாய்மூா்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →