பூச்சி மருந்தை குடித்த சிறுவன் உயிரிழப்பு
திருக்குவளை அருகே பூச்சி மருந்தை குடித்த சிறுவன், புதன்கிழமை உயிரிழந்தாா்.
திருக்குவளை அருகே பூச்சி மருந்தை குடித்த சிறுவன், புதன்கிழமை உயிரிழந்தாா்.
சித்தாய்மூா் வடக்கு பகுதியைச் சோ்ந்த பக்கிரிசாமி மகன் ராஜேஷ் (13). இவா் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவா் எனக் கூறப்படுகிறது. இச்சிறுவன் வயலுக்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தைக் குடித்தாராம். இதனால், உடல் சோா்வுற்று வாந்தி எடுத்த ராஜேஷை, அவரது தாயாா் திருக்குவளை அரசு வட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளாா்.
பின்னா், மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் வியாழக்கிழமை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருக்குவளை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.