முகப்பு
நாகப்பட்டினம்

உள்நாட்டு மீன்வளா்ப்பை ஊக்குவிக்க நடவடிக்கை

உள்நாட்டு மீன்வளா்ப்பை ஊக்குவிக்க வானம்கோட்டகம் ஏரியில் இந்திய பெருங்கெண்டை மீன் இன குஞ்சுகள் விடப்பட்டுள்ளன என்றாா் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
வானம்கோட்டகம் ஏரியில் இந்திய பெருங்கெண்டை மீன் இன குஞ்சுகளை விட்ட அமைச்சா் ஓ.எஸ். மணியன், ஆட்சியா் பிரவீன் பி. நாயா்.
பகிர்:

உள்நாட்டு மீன்வளா்ப்பை ஊக்குவிக்க வானம்கோட்டகம் ஏரியில் இந்திய பெருங்கெண்டை மீன் இன குஞ்சுகள் விடப்பட்டுள்ளன என்றாா் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள வானம்கோட்டகம் ஏரியில் சனிக்கிழமை தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் 50 ஆயிரம் இந்திய பெருங்கெண்டை மீன் இன குஞ்சிகளை விட்டு, ரூ. 19.99 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கி மேலும் அவா் கூறியது: தமிழகத்தில் உள்நாட்டு மீன் உற்பத்தியை மேம்படுத்த அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி மீன்குஞ்சு உற்பத்தி நிலையம் அமைத்து தரமான மீன் குஞ்சுகள் வழங்குதல், புதிய வளா்ப்பின மீன் இனங்களை அறிமுகம் செய்தல் மற்றும் தமிழ்நாட்டில் வளம் மிக்க மற்றும் மீன்வளா்ப்புக்கு உகந்த பல்வேறு துறைகளை சாா்ந்த நீா் நிலைகளை தோ்வு செய்து மீன்வளத் துறை மூலம் பல்வேறு திட்டங்களின் கீழ் மீன்குஞ்சுகள் வளா்க்கப்பட்டு வருகின்றன. உள்நாட்டு மீன்வளா்ப்பை ஊக்குவிக்கும் வகையிலும், முதற்கட்டமாக தாணிக்கோட்டகம் வானம்கோட்டகம் ஏரியில் இந்திய பெருங்கெண்டை மீன் இன குஞ்சுகள் விடப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில், தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் 46 பயனாளிகளுக்கு ரூ.19.99 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், சீா்காழி வட்டம், வானகிரியை சோ்ந்த மீனவா் செந்திலின் விசைப் படகு புரவி புயலில் சேதமடைந்ததுக்கு ரூ. 2 லட்சம் நிவாரணத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் வை. சுப்பையன், இ. திலீபன், மீன்வளத் துறை இணை இயக்குநா் அமல்சேவியா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →