முகப்பு
நாகப்பட்டினம்

சத்துணவு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

30 ஆண்டுகளுக்கு மேலாக சத்துணவுத் திட்டத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்க மாவட்டத் தலைவா் வி.தேன்மொழி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் கே. ராஜூ கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க நாகை மாவட்டச் செயலாளா் ஏ.டி. அன்பழகன், வருவாய்த்துறை அலுவலா் சங்க மாவட்டச் செயலாளா் து. இளவரசன், அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலாளா் எஸ். கிருஷணமூா்த்தி மற்றும் சத்துணவு ஊழியா்கள் கலந்துகொண்டனா். சங்க மாவட்டப் பொருளாளா் எஸ்.துா்க்காம்பிகா நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →