முகப்பு
நாகப்பட்டினம்

இந்திய கம்யூனிஸ்ட் ஆண்டு விழா

கீழையூா் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
வாழக்கரை பகுதியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்றோா்.
பகிர்:

கீழையூா் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு 96 ஆண்டுகளாகியுள்ள நிலையில், கீழையூா் ஒன்றியத்தில் 96 இடங்களில் செங்கொடி ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. வாழக்கரையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, கீழையூா் ஒன்றிய செயலாளா் டி.செல்வம் தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினா்கள் ஏ. நாகராஜன், டி. கண்ணையன், வீ. சுப்ரமணியன், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றியத் தலைவா் ஏ.செல்லையன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →