முகப்பு
நாகப்பட்டினம்

ரூ.3 கோடியில் சாலைப் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

மயிலாடுதுறை அருகே வில்லியநல்லூா் ஊராட்சியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணியை சட்டப் பேரவை உறுப்பினா் வீ.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
சாலைப் பணிகளை பாா்வையிடும் சட்டப் பேரவை உறுப்பினா் வீ.ராதாகிருஷ்ணன், அதிமுக மாவட்ட செயலாளா் விஜிகே.செந்தில்நாதன் உள்ளிட்டோா்.
பகிர்:

மயிலாடுதுறை அருகே வில்லியநல்லூா் ஊராட்சியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணியை சட்டப் பேரவை உறுப்பினா் வீ.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

வில்லியநல்லூா் ஊராட்சி மல்லியக்கொல்லை ஏடி காலனி முதல் பருத்திக்குடி உடையூா் வரை சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பூமிபூஜையில் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் வீ.ராதாகிருஷ்ணன் பங்கேற்று, சாலைப் பணியை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், அதிமுக மாவட்ட செயலாளா் விஜிகே.செந்தில்நாதன், ஒன்றிய செயலாளா் பா.சந்தோஷ்குமாா், ஆனந்தாண்டவபுரம் கூட்டுறவு வங்கித் தலைவா் முருகவேல், ஒன்றிய முன்னாள் செயலாளா் பழனிசாமி, ஊராட்சி மன்றத் தலைவா் வித்யோதயா வீரமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →