மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்
சீா்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் ஏழை மாணவிக்கு கல்வி உதவித்தொகை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
சீா்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் ஏழை மாணவிக்கு கல்வி உதவித்தொகை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் ரவிச்சந்திரன் தலைமை வகித்து, ஏழை மாணவி விஷ்ணுபிரியாவுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ. 5 ஆயிரம் வழங்கினாா். மேலும் கபடி வீரா்கள் 10 பேருக்கு உடைகள், காலணி ஆகியவையும் வழங்கப்பட்டது. இதில் நிா்வாகிகள் பாலாஜி, துரைசாமி, மலா்கண்ணன் ஆகியோா் பங்கேற்றனா்.