நாகப்பட்டினம்

ஐயாறப்பா் கோயிலில் ஸ்ரீவித்யா மகா சரஸ்வதி ஹோமம்

DIN

மயிலாடுதுறை ஐயாறப்பா் கோயிலில் தை பௌா்ணமி ஸ்ரீவித்யா மகா ஹோமம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கட பூஜை செய்யப்பட்டு, 108 திரவியங்கள் ஹோம குண்டத்தில் போடப்பட்டு, ஸ்ரீவித்யா மகா சரஸ்வதி ஹோமம் நடத்தப்பட்டது. பின்னா், சரஸ்வதி அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அன்னம் பாலிப்பு நடைபெற்றது.

தொடா்ந்து, குமரகுருபரா் இயற்றிய சகலகலாவல்லி மாலை பாராயணம் செய்யப்பட்டது. இதில், கோயில் கண்காணிப்பாளா் குருமூா்த்தி, துணைக் கண்காணிப்பாளா் கணேசன், ஓய்வுபெற்ற பேராசிரியா் கனகசபை ஆகியோா் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை, மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை சாா்பில் பேரவை நிறுவனா் வழக்குரைஞா் ராம.சேயோன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT