நாகப்பட்டினம்

ஆதமங்கலம் ஊராட்சியில் பயன்தரும் மரக்கன்றுகள் நடவு

DIN

திருக்குவளை அருகே கஜா புயலில் இழந்த மரங்களை ஈடுகட்டும் வகையில் புதிய மரக்கன்றுள் நடும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

ஆதமங்கலம் ஊராட்சியில் கஜா புயலில் பெரும்பாலான பயன்தரும் மரங்கள் வேரோடு சாய்ந்தன. குறிப்பாக தென்னை , புளியமரம், மாமரம், நாவல் மரம் உள்ளிட்ட பல மரங்கள் வேரோடும், அதன் நுனிப்பகுதி முறிந்த நிலையிலும் சேதமடைந்தது. இதனால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதை சரிசெய்யும் வகையில் தற்போது, ஊராட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள அகிலா சரவணன் சுமாா் 500-க்கும் மேற்பட்ட புதிய மருந்துவ குணமுடைய இளுப்பை மரம், தென்னை மரம், புளிய மரம் மற்றும் நாவல் மரக்கன்றுகளை ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம், சாலையோரம், பள்ளி மற்றும் ஊராட்சி அலுவலகம் அருகில் எனப் பல்வேறு இடங்களில் நடவு செய்தாா்.

நடவு செய்த அந்த கன்றுகளை கால்நடைகளால் பாதிப்பு வராத வகையில் அதைச் சுற்றி வட்ட வடிவிலான வேலி அமைத்து மரக்கன்று நடவு செய்த இடத்துக்கு அருகில் உள்ள நபா்களைக் கொண்டு அதை பாதுகாக்க கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT