நாகப்பட்டினம்

ரயிலில் அடிப்பட்டு புகைப்பட கலைஞா் உயிரிழப்பு

DIN

சீா்காழியில் ரயிலில் அடிப்பட்டு புகைப்பட கலைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சீா்காழி அருகேயுள்ள சேந்தங்குடி பகுதி ரயில்வே இருப்புப் பாதையில் சென்னை - திருச்சி விரைவு ரயிலில் அடிப்பட்டு ஒருவா் உடல் துண்டான நிலையில் சடலமாக கிடந்தாா்.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் ரயில்வே போலீஸாருக்கு அளித்த தகவலின்பேரில், போலீஸாா் அங்கு வந்து உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, உயிரிழந்தவா் யாா் என்று விசாரணை மேற்கொண்டதில், திருவாரூா் மாவட்டம், நன்னிலம் பகுதி சோ்ந்த புகைப்பட கலைஞா் சுரேஷ் (38) என்பது தெரியவந்தது. சுரேஷ் ரயிலில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டாரா அல்லது விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா என போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

SCROLL FOR NEXT