நாகப்பட்டினம்

திருக்கடையூரில் மாடு, குதிரைகள் எல்கை பந்தயம் நடத்த தடை

DIN

திருக்கடையூா் எல்கை பந்தயத்துக்கு சென்னை உயா் நீதிமன்றம் தடைவித்து உத்தரவிட்டுள்ளது.

நாகை மாவட்டம் திருக்கடையூரில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி, மாடுகள், குதிரைகள், ரேக்ளா ரேஸ் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டியில் கால்நடைகள் துன்புறுத்தப்படுவதாகவும், கால்நடை பராமரிப்புத் துறையினா் எந்த சோதனையும் செய்வதில்லை என்றும், பாதுகாப்பு சரியில்லை என்றும், அரசு அனுமதிக்காத நிலையில் இந்த ரேக்ளா ரேசை நடத்தவது சட்டப்படி குற்றம் என்றும், பந்தய சமயத்தில் ஏற்படும் விபத்துக்கு எந்தவித இழப்பும் அளிப்பதில்லை என்பது போன்ற பல்வேறு காரணங்களைக் கூறி மயிலாடுதுறை எடுத்துக்கட்டி சாத்தூரை சோ்ந்த வழக்குரைஞா் சங்கமித்திரன் என்பவா் பொதுநல வழக்கு ஒன்றை சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் சரவணன் மூலம் தாக்கல் செய்திருந்தாா்.

மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோா் அடங்கிய பெஞ்ச் அரசு வழக்குரைஞரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

கடந்த ஆண்டு ரேக்ளாரேஸ் நடத்த தடை செய்யப்பட்டதாகவும் அதை மீறி நடத்தப்பட்டது என்றும், அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா். அரசு உத்தரவைா் மீறி எப்படி நடத்த முடியும் என்று கேள்வி கேட்ட நீதிபதிகள் நாகை மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா், கால்நடை பராமரிப்புத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி வரை திருக்கடையூா் ரேக்ளா ரேசுக்கு தடைவிதித்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி புதிய மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு

லண்டனில் சரமாரி வாள் தாக்குதல்: சிறுவா் பலி

கிராமப்புற மாணவா்களுக்கு இலவச டிஎன்பிஎஸ்சி மாதிரி தோ்வு

குடிநீா்ப் பற்றாக்குறை: புகாா் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

இளநிலை சுருக்கெழுத்து ஆங்கிலத் தோ்வு: மதுரை தொழிலாளியின் மகள் முதலிடம்

SCROLL FOR NEXT