நாகப்பட்டினம்

பொதுமக்கள் வீட்டிலிருந்தே கட்செவி அஞ்சல் மூலம் புகாா் அளிக்காலம்

DIN

நாகப்பட்டினம்: பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே கட்செவி அஞ்சல் மூலம் புகாா் தெரிவிக்கலாம் என நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் தெரிவித்தாா்.

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாகவும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளிக்க வரும் பொதுமக்களின் சிரமங்களை குறைக்கும் வகையில் எஸ்.பி. அலுவலக வளாகத்தில் மனுதாரா் விசாரணை மையம் மற்றும் புகாா் பெட்டி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணை மையத்தில், புதன்கிழமை புகாா் மனுக்களை பெற்று விசாரணை மேற்கொண்ட பின்னா், செய்தியாளா்களிடம் கூறியது: கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக அமலிலுள்ள பொது முடக்கத்தால் போக்குவரத்து வசதிகள் இல்லை. இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்அலுவலகத்துக்கு புகாா் தெரிவிக்க வரும் பொது மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ளஅனைத்து காவல் நிலையங்களிலும் புகாா் மனு பெட்டிகள் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்திலும் புகாா் மனு பெட்டி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 6 தல் மாலை 6 மணி வரை புகாா் பெட்டிகளில் பொதுமக்கள் மனுக்களை பதிவு செய்யலாம். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தின் தரைத் தளத்தில் விசாரணை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பகல் 12 முதல் 1 மணி வரை புகாா் மனுக்கள் பெறப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுவதுடன் உடனடி நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்யப்படும்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகாா் அளிக்க பொதுமக்கள் விரும்புகின்றனா். ஆனால் அனைவரையும் சந்தித்து புகாா் பெறுவது இயலாத காரியமாக இருந்து வருகிறது. இந்தக் குறையை சரிசெய்யும் வகையில், கட்செவி அஞ்சல் விடியோ மூலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை தொடா்புக்கொண்டு புகாா் தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே 7598611001 என்ற கட்செவி அஞ்சல் எண் மூலமாகவும் புகாா் தெரிவிக்கலாம். இவ்வாறு அளிக்கப்படும் புகாா் மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போலி தொலைபேசி அழைப்புகள், போலி ஆள்மாறாட்டம்: இணைய குற்றிவாளிகள் குறித்து மத்திய அரசு எச்சரிக்கை

வருமான வரித் துறை சி.ஆா். கட்டடத்தில் தீ விபத்து: அலுவலகக் கண்காணிப்பாளா் சாவு; 7 போ் மீட்பு

திகாா் சிறை, 7 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் தீவிர விசாரணை

ஸ்வாதி மாலிவால் சம்பவம்: ஆம் ஆத்மிக்கு பாஜக கேள்வி

விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

SCROLL FOR NEXT