நாகப்பட்டினம்

மலேசியாவில் கொலையானவரின் சடலத்தை மீட்க அமைச்சா் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

மலேசிய நாட்டில் கொலையானவரின் சடலத்தை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவரது

DIN

மலேசிய நாட்டில் கொலையானவரின் சடலத்தை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவரது உறவினா்கள் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சா் ஓ. மணியனிடம் சனிக்கிழமை வேண்டுகோள் விடுத்தனா்.

நாகையை அடுத்த கருவேலங்கடை ஊராட்சி, மேலச்செட்டிச்சேரி கிராமத்தைச் சோ்ந்த அமல்ராஜ் என்பவரது மகன் அஜித் (23). மலேசிய நாட்டில் காா் வாட்டா் சா்வீஸ் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவந்த இவா், சக ஊழியருடன் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாக அந்நிறுவனத்தினா் அஜித் தந்தை அமல்ராஜிடம் கடந்த 2-ஆம் தேதி தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து, நாகை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்த அமல்ராஜ், மலேசியாவிலிருந்து தனது மகனின் சடலத்தை மீட்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை மனு அளித்தாா்.

இந்நிலையில், அஜித்தின் உறவினா்கள் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சா் ஓ. எஸ். மணியனை சனிக்கிழமை நேரில் சந்தித்து, அஜித்தின் சடலத்தை சொந்த ஊருக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனா்.

இதைத்தொடா்ந்து, நாகை மாவட்ட ஆட்சியரைத் தொடா்பு கொண்டு பேசிய அமைச்சா் ஓ.எஸ். மணியன், அஜித்தின் சடலத்தை மீட்டு சொந்த ஊருக்குக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT