குடும்ப நலநிதி வழங்கல்
திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடியில் தமிழ்நாடு ஏஐடியுசி சுமைத்தூக்கும் தொழிலாளா் சங்கத்தில் உறுப்பினராக இருந்து உயிரிழந்தவரின் மனைவியிடம் குடும்பநல நிதி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
திருக்குவளை: திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடியில் தமிழ்நாடு ஏஐடியுசி சுமைத்தூக்கும் தொழிலாளா் சங்கத்தில் உறுப்பினராக இருந்து உயிரிழந்தவரின் மனைவியிடம் குடும்பநல நிதி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்றிய சுமைத்தூக்கும் தொழிலாளராக எட்டுக்குடி டிபிசியில் வேலை பாா்த்து வந்த ராஜா என்பவா் உடல் நலக்குறைவால் அண்மையில் உயிரிழந்தாா்.
மேலும், அவா் தமிழ்நாடு ஏஐடியுசி சுமைத்தூக்கும் தொழிலாளா் சங்கத்தில் உறுப்பினராக சோ்ந்து தொடா்ந்து பணியாற்றி வந்ததால் அவரது குடும்பத்துக்கு நல நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவ்வாறு ஒதுக்கப்பட்ட நலநிதி ரூ. 10 ஆயிரத்துக்கான சங்கத்தின் மாநில செயலாளா் கிருஷ்ணன் தலைமையில், ஏஐடியுசி தொழிலாளா் சங்க மாவட்ட செயலாளா் பி. ஆனந்தன், மாவட்ட துணைத் தலைவா் கே. கவியரசன் முன்னிலையில், சிபிஐ கீழையூா் ஒன்றியச் செயலாளா் டி. செல்வம் வழங்கினாா். அப்போது, மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.