கபசுரக் குடிநீா் வழங்கல்
திருமருகல் பேருந்து நிலையம் அருகில் கபசுரக் குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
திருமருகல்: திருமருகல் பேருந்து நிலையம் அருகில் கபசுரக் குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் பி. கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஊராட்சிச் செயலா் கே. செந்தில்குமாா், ஓய்வுப் பெற்ற கல்வி அலுவலா் எம். லட்சுமிநாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வா்த்தக சங்கத் தலைவா் தியாக சத்தியமூா்த்தி பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கினாா். திட்டச்சேரி வருமுன் காப்போம் விழிப்புணா்வு சேவை மைய சித்த மருத்துவா் மு. அஜ்மல்கான் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினாா். பின்னா் பொதுமக்களுக்கு கரோனா தொற்றுக் குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.