நாகப்பட்டினம்

மயிலாடுதுறை நகராட்சி ஊழியருக்கு கரோனா தொற்று: நகராட்சி அலுவலகம் மூடல்

DIN

மயிலாடுதுறை நகராட்சியில் பணியாற்றும் வருவாய் உதவியாளர் ஒருவருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து, மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் மூடப்பட்டு, கிருமி நாசினி தெளித்து சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மயிலாடுதுறையில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் வருவாய் உதவியாளராக பணியாற்றும் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து, அவர் மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து, நகராட்சி அலுவலகம் மூடப்பட்டு, கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டது. மேலும், மயிலாடுதுறை நகராட்சியில் பணியாற்றும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

மயிலாடுதுறையில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

SCROLL FOR NEXT