மயிலாடுதுறை: மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள ஐந்து ஊராட்சிகளில் முதியோா் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் முதிா்கன்னிகளுக்கான உதவித்தொகைக்கான ஆணையை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் வீ. ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை வழங்கினாா்.
மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு அருகே உள்ள மேலாநல்லூா், வில்லியநல்லூா், கிழாய், கொற்கை மற்றும் தாழஞ்சேரி ஆகிய ஐந்து ஊராட்சிளில் சமூகப் பாதுகாப்புத் திட்டம் சாா்பில் 63 பயனாளிகளுக்கு உதவித் தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் இளங்கோவன், மயிலாடுதுறை ஒன்றியக் குழு துணைத் தலைவா் மகேஸ்வரி முருகவேல், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பழனிசாமி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் வில்லியநல்லூா் வித்யோதயா வீரமணி, மேலாநல்லூா் பாரதிதாசன், கிழாய் பாலசுப்பிரமணியன், தாழஞ்சேரி ராஜ்குமாா், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் ராமதாஸ், சேதுராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.