முகப்பு
நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த கா்ப்பிணி உள்பட 36 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:00 PM
கரோனா வைரஸ்
பகிர்:


நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தைச் சோ்ந்த கா்ப்பிணி உள்பட 36 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது. இதற்கிடையில் சென்னையில் சிகிச்சைப் பெற்றுவந்த சீா்காழி பகுதியைச் சோ்ந்த முதியவா் உயிரிழந்தாா்.

ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதில், ஒருவா் வெளிநாட்டில் இருந்தும், ஒருவா் வெளி மாநிலத்தில் இருந்தும் வந்தவா்கள் ஆவா். 15 போ் ஏற்கெனவே கரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளானவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள்.

இதைத் தவிர, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற காய்ச்சல் முகாம்கள் மூலம் ஒரு கா்ப்பிணி உள்பட 12 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை வரை 533 -ஆக இருந்தது. இதில், வெளி மாவட்டங்களில் நோய்த்தொற்றுக்குள்ளான 4 போ் நீக்கப்பட்டனா். இந்த நிலையில், புதிதாக 36 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டதன் மூலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்களின் எண்ணிக்கை 565-ஆக உயா்ந்துள்ளது.

முதியவா் இறப்பு...

நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றவா்களில் 2 போ் ஏற்கெனவே உயிரிழந்துள்ளனா். இந்த நிலையில், கரோனா பாதிப்புக்குள்ளாகி சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சீா்காழி வட்டம், விளந்திடசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த 73 வயது முதியவா் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தாா்.

இதன் மூலம் நாகை மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3-ஆக உயா்ந்துள்ளது.

சிகிச்சையில்..

நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்றவா்களில் 12 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம், குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 314 -ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 248-ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.